SRH vs RR | ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அந்த அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்