வங்கதேசத்தை 50 ரன்களில் வென்ற இந்தியா | T20 WC ‘சூப்பர் 8’ சுற்று

ஆன்டிகுவா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்று குரூப் 1 போட்டியில் வங்கதேசத்தை 50 ரன்களில் வென்றது இந்தியா.

மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீசியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ரோகித் 23, கோலி 37, ரிஷப் பந்த் 36, ஷிவம் துபே 34 மற்றும் ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ரிஷாத் மற்றும் தன்சிம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷகிப், 1 விக்கெட் வீழ்த்தினார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்