பிஃபா உலகக் கோப்பை தகுதி சுற்று: இந்தியா - குவைத் இன்று மோதல்

கொல்கத்தா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்துதொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுகிறார். தகுதி சுற்று தொடரில் இந்திய அணி இறுதிக்கட்ட நிலைக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

19 வருட கால்பந்து வாழ்க்கையில் இருந்து இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெற உள்ள 39 வயதான சுனில் சேத்ரி, வெற்றியுடன் விடைபெறுவதிலும் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னேறச் செய்வதிலும் கூடுதல் முனைப்பு காட்டக்கூடும். தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. கத்தார் 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குவைத் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்