ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்குமா? | T20 WC

பார்படாஸ்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூயார்க் ஆடுகளத்தில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. கனடா அணிக்கு எதிராக லாடர்கில் மைதானத்தில் விளையாட இருந்த கடைசி லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. லீக் சுற்றில் இந்திய அணி வேகப்பந்து வீச்சை பிரதானமாக கொண்டு வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடியது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்