அக்.19-ல் தமிழ் தலைவாஸ் - தெலுகு டைட்டன்ஸ் மோதல்

சென்னை: புரோ கபடி 11-வது சீசன் போட்டி வரும் அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி அக்டோபர் 18-ல் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் யு மும்பா - தபாங் டெல்லி மோதுகின்றன.

12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாட உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 19-ம் தேதி தெலுகு டைட்ன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்