புதுடெல்லி: ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி வரும் அக்டோபார் 13 முதல் 18-ம் தேதி வரை டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடுதல் மையத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 23 பேர் கொண்ட அணியை இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.
இதில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கம் வென்றுசாதனை படைத்த 22 வயதான மனு பாகருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 9 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். திவ்யான்ஷ் சிங் பன்வார், சோனம் உத்தம் மஸ்கர், ரிதம் சங்க்வான். கனேமத் செகோன் ஆகியோர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்காக நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற ரேங்கிங்வாயிலாக தேர்வாகி உள்ளனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்