சென்னையில் இந்தியா, வங்கதேச டெஸ்ட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா, வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கவுள்ளது. வரும் 19-ம் தேதி இவ்விரு அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 9-ம் தேதி (இன்று) தொடங்கவுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,000-ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.15,000 ஆகவும் இருக்கும். இன்று காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்