மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வியான் முல்டர், ரபாடா வேகத்தில் 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேச அணி

மிர்பூர்: எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூர் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியானது வியான் முல்டர், காகிசோ ரபாடா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது.

ஷத்மான் இஸ்லாம் (0), மொமினுல் ஹக் (4), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (7) ஆகியோர் வியான் முல்டர் பந்தில் நடையை கட்டினர். இவர்களை தொடர்ந்து முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்னிலும், லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் காகிசோ ரபாடா பந்தில் ஆட்டமிழந்தனர். மெஹிதி ஹசன் 24 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 60 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த வங்கதேச அணியால்அதன் பின்னர் மீள முடியாமல் போனது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்