ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 297 ரன்களை சேர்த்துள்ளது. இதில் 8 சிக்சர்களை விளாசி 111 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினார் சஞ்சு சாம்சன்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுடெல்லியில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். 2வது ஓவரில் தொடர்ந்து 4 போர்கள் அடித்து வெளுத்து வாங்கினார் சஞ்சு சாம்சன். மறுபுறம் இருந்த அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிக்சர்களாக பறக்கவிட்டு சிறப்பித்தார். இதனால் இந்திய அணி பவர் ப்ளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 82 ரன்களைச் சேர்த்தது. இதுதான் டி20 போட்டிகளில் பவர் ப்ளேவில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்