சென்னை: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதேவேளையில் இந்திய அணியின் இந்த திடீர் சரிவு மற்ற அணிகளுக்கான வாய்ப்பின் கதவுகளை திறந்துள்ளது.
தற்போதைய நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 62.82 வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 வெற்றி சராசரியுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளே மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனினும் நியூஸிலாந்துக்கு எதிரான இரு தோல்விகளால் இந்திய அணியின் வாய்ப்பு கடினமாக மாறி உள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்