பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து வாகா மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் தொடக்கவீரரான கே.எல்.ராகுல், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் முழங்கையில் காயம் அடைந்தார். இதனால் அவர், மைதானத்தில் இருந்து வெளியேறிருந்தார். அவரது காயத்தின் தன்மை குறித்து இதுவரை பிசிசிஐ முறைப்படி அறிவிக்கவில்லை. இந்நிலையில் 2-வது நாளான நேற்று மற்றொரு முன்னணி பேட்ஸ்மேனான ஷுப் கில், ஸ்லிப் திசையில்பீல்டிங் செய்த போது விரலில் காயம் அடைந்தார். அவரது இடதுகட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இது போன்ற காயம் குணமடைவதற்கு 14 நாட்கள் வரை ஆகும். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதிதொடங்குகிறது. அதற்குள் ஷுப்மன் கில் முழு உடற்தகுதியை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது-
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்