பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்புகளின்றி இந்திய அணி 172 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி, ஆஸ்திரேலியாவை விட 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் வெள்ளிகிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா. இதில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 1947-ல் சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 107 ரன்களை சேர்த்தது. இது தான் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், தற்போது 104 ரன்கள் என்ற பின்தங்கிய சாதனையை படைத்துள்ளது ஆஸ்திரேலியா.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்