பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 67 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாததால் இந்திய அணியானது வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில், நிதிஷ்குமார் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பந்து 37 ரன்களையும் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காத நிலையில், 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 150 ரன்களைச் சேர்த்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்