நித்திஷ் குமார் ரெட்டி 105, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்: இந்திய அணி 358 ரன் குவித்து அசத்தல் | IND vs AUS

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நித்திஷ் குமார் ரெட்டியின் சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அரை சதம் ஆகியவற்றால் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது.

மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4, ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்