டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: 10-வது சுற்றில் குகேஷ் வெற்றி

விக் ஆன் ஜீ: நெதர்லாந்தின் விக் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் 10-வது சுற்றில், நெதர்லாந்தின் மேக்ஸ் வார்மெர்டாமை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் குகேஷ் 34-வது காய் நகர்த்தலின் போது வெற்றி கண்டார்.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 48-வது நகர்த்தலின் போது ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசெவை தோற்கடித்தார். 10 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இன்னும் 3 சுற்று ஆட்டங்கள் உள்ளன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்