இந்தோனேஷியா பாட்மிண்டன்: 2-வது சுற்றில் தனிஷா - கபிலா ஜோடி

ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி, இந்தோனேஷியாவின் அட்னான் மவுலானா, இன்தா கஹ்யா சாரி ஜமீல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்