மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களின் செயல் திறன் மோசமாக இருந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் 6-வது சுற்று தொடங்கியது.
இதில் மும்பை - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை பிகேசி மைதானத்தில் நடைபெற்றது. மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித் சர்மா 19 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் எடுத்த நிலையில் வேகப் பந்து வீச்சாளர் உமர் நசீர் பந்தை மிட் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுகிப் நபி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்