“கம்பீர் ஒரு வஞ்சகர்; கேகேஆர் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்” - மனோஜ் திவாரி சாடல்

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரின் கள வியூகம், அணி தேர்வு உள்ளிட்டவை விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் அடங்குவர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்