சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ரோஹித் கேப்டன், கில் துணை கேப்டன்!

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக்குழுவினர் இன்று மும்பையில் அறிவித்தனர். இதே அணியே இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்