சவால்களை திறன்பட கையாண்டது உத்தராகண்ட் அரசு: 38-வது தேசிய விளையாட்டு போட்டி நிறைவில் அமித் ஷா புகழாரம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இன்று (பிப்.14) நிறைவடைந்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை உத்தராகண்ட் மாநிலம் சிறப்பாக மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார். மேலும், 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த மாநிலத்தின் ஹல்துவானி நகரம் கோலாபூரில் உள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இதன் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்