சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் களத்துக்கு வந்த சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர்.
கடந்த போட்டிகளில் நன்றாக ஆடி கவனம் ஈர்த்த ஷேக் ரஷீத் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். எதிர்முனையில் இருந்த ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்தார். சாம் கரண் 9 ரன்களுடன் வெளியேறவே, ஜடேஜா 21 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக டெவால்ட் ப்ரெவிஸ் 25 பந்துகளுகு 42 ரன்கள் எடுத்து அசத்தினார். துபே 12, தீபக் ஹூடா 22, தோனி 6 அன்ஷுல் கம்போஜ் 2 என சிஎஸ்கே 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 154 அடித்திருந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்