பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியல்: விராட் கோலி, ரோஹித்துக்கு ரூ.7 கோடி

மும்பை: 2024-25 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று (21-ம் தேதி) வெளியிட்டது. ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் நான்கு வீரர்கள் ஏ+ கிரேடு பிரிவிலும், ஆறு வீரர்கள் ‘ஏ’ கிரேடிலும், ஐந்து பேர் ‘பி’ கிரேடிலும் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 19 பேருக்கு ‘சி’ கிரேடு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு ‘பி’ கிரேடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ‘சி’ கிரேடு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். கடந்த சீசனில் இவர்கள் இருவருமே உள்நாட்டு போட்டிகளில் விளையாட மறுத்ததால் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்