அசத்திய தொடக்க வீரர்கள், ஆட்டம் கண்ட நடுவரிசை, கரை சேர்த்த தோனி: தொடர் தோல்விகளுக்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணியை 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் என்ற நிலையில் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் மட்டுப்படுத்தினர். அதிகபட்சமாக ரிஷப் பந்த் 49 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்தார்.

மிட்செல் மார்ஷ் 30, ஆயுஷ் பதோனி 22, அப்துல் சமத் 20 ரன்கள் சேர்த்தனர். நிகோலஸ் பூரன் 8 ரன்களில் வெளியேறினார். பந்து வீச்சில் சிஎஸ்கே தரப்பில் ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். விக்கெட் கைப்பற்றாவிட்டாலும் நூர் அகமது 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து லக்னோ அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்