அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இறுதிக்கட்ட ஓவர்களில் அசத்தி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகம் மிட்செல் ஸ்டார்க்கிற்கும், தொடக்க ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது சிராஜுக்கும் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியிருந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்