​போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை

புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார்.

இந்த போட்​டி​யில் பங்​கேற்க பாரிஸ் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீ​முக்​கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​திருந்​தார். ஆனால் நீரஜ் சோப்​ரா​வின் அழைப்பை அர்​ஷத் நதீம் நிராகரித்​தார். மே 22-ம் தேதி தென் கொரி​யா​வில் நடை​பெற உள்ள ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் தொடரில் பங்​கேற்க உள்​ள​தால் தன்​னால் கலந்​து​கொள்ள முடி​யாது என்று அர்​ஷத் நதீம் விளக்​கமளித்​திருந்​தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்