தடுமாறும் சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல் | IPL 2025

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 10 அணிகள் கலந்துகொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்ட சிஎஸ்கே அணி சீசனை கவுரவமான இடத்துடன் நிறைவு செய்யய முயற்சிக்கக்கூடும். 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வெற்றி பெற முடியாமல் தடுமாறி வருகிறது. இங்கு முதல் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் அதன் பின்னர் நடைபெற்ற 5 ஆட்டங்களிலும் தோல்விகளை சந்தித்
தது. ருதுராஜ் காயம் காரணமாக விலகிய நிலையில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் சிஎஸ்கே அணி தத்தளித்து வருகிறது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்