பெங்களூரு: 18-வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் சாம்பியன் கனவு நிறைவேறும் சூழல் இருப்பதாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அந்த அணிக்கு இந்த சீசனிலும் இல்லை என்பது போன்ற சூழல் எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் வரும் 17-ம் தேதி முதல் நடப்பு சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஆடும் லெவனில் விளையாடும் வீரர்களில் சிலர் எஞ்சியுள்ள சீசன்களில் விளையாடுவது சிக்கலாகி உள்ளது. சில வீரர்களுக்கு காயம் மற்றும் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் சீசனில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்