யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் நுழைந்தது யு மும்பா; நாளை ஜெய்ப்பூர் பேட்ரியாஸுடன் பலப்பரீட்சை

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் - யு மும்பா டிடி அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய் 3-0 (11-8, 11-4, 11-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை அள்ளினார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்