‘சிக்ஸர் மன்னன்’ ரிஷப் பந்த் - தோனி சாதனை சமன்!

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய 59-வது ஓவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் விளாசும் 35-வது சிக்ஸர் இதுவாகும்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசியிருந்த மேற்கு இந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸின் (34 சிக்ஸர்கள்) சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த். இந்த வகை சாதனையில் டிம் சவுதி (30), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (27), ஷுப்மன் கில் (26) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்