யு-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

பிரிஸ்​பன்: இந்​தியா யு-19 மற்றும் ஆஸ்​திரேலியா யு-19 அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பிரிஸ்​பன் நகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய்த இந்​தியா யு-19 அணி 49.4 ஓவர்​களில் 300 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தொடக்க வீர​ரான வைபவ சூர்​ய​வன்ஷி 68 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​கள் விளாசிய நிலை​யில் யாஷ் தேஷ்​முக் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய விஹான் மல்​ஹோத்ரா 74 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும், விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான அபிக்​யான் 64 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 71 ரன்​களும் சேர்த்​தனர். ஆஸ்​திரேலியா யு-19 அணி சார்​பில் வில் பைரோம் 3, யாஷ் தேஷ்​முக் 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்