
சமீபத்தில் 2-2 என்று சமனில் முடிந்த ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் துணை கேப்டனாகப் பணியாற்றினார். மான்செஸ்டரில் நடந்த 4வது போட்டியில் கிறிஸ் வோக்ஸ் பந்தை வித்தியாசமாக ஆடப்போய் ஃபுல்டாஸை நேராக இடது பாதத்தில் வாங்கி எலும்பு முறிவு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனாலும் மீண்டும் இறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை மிட்விக்கெட்டில் வெறித்தனமாக சிக்ஸ் அடித்ததை மறக்கத்தான் முடியுமா? ரிஷப் பண்ட் இல்லாத டெஸ்ட் அணியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஒருகாலத்தில் கபில்தேவ் இல்லாத இந்திய அணியை, பிறகு சச்சின் இல்லாத இந்திய அணியை யோசித்துக் கூட பார்க்க முடியாது. அது போல்தான் இப்போது ரிஷப் பண்ட்டும்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்