யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173*, சாய் சுதர்சன் 87 ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 318 ரன் குவிப்பு

புதுடெல்லி: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் நாளில் இந்​திய அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 318 ரன்​கள் குவித்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் சதம் விளாசி அசத்​தி​னார். அவருக்கு துணை​யாக விளை​யாடிய சாய் சுதர்​சன் அரை சதம் அடித்​தார்.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​ட​னான ஷுப்​மன் கில் பேட்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி சிறப்​பான தொடக்​கம் கொடுத்​தது. 17.3 ஓவர்​களில் 58 ரன்​கள் சேர்க்​கப்​பட்ட நிலை​யில் இந்த ஜோடி பிரிந்​தது. கே.எல்​.​ராகுல் 54 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோமல் வாரிக்​க​னின் சுழற்​பந்து வீச்சை கிரீஸை விட்டு வெளியே வந்து விளை​யாட முயன்​ற​போது டெவின் இம்​லாக்​கால் ஸ்டெம்​பிங்க் செய்​யப்​பட்​டார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்