2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: தொடரை 1-1 என சமனில் முடித்தது

ராவல்​பிண்டி: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி தொடரை 1-1 என சமனில் முடித்​தது. ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வந்த இந்த டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 333 ரன்​கள் எடுத்​தது.

அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி 404 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. 71 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 35 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 94 ரன்​கள் எடுத்​தது. பாபர் அஸம் 49, முகமது ரிஸ்​வான் 16 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்