இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 299 ரன்கள் குவிப்பு

பெங்களூரு: இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. லெசெகோ செனோக்வானே ரன் ஏதும் எடுக்காத நிலையில் அன்ஷுல் கம்போஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜூபைர் ஹம்சா, ஜோர்டான் ஹெர்மானுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்