பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்