இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ஹாரி புரூக்கின் சதம் வீண்: நியூஸிலாந்து வெற்றி

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக், தனி ஒருவராக போராடி 101 பந்துகளில் 135 ரன்கள் விளாசி சரிவில் இருந்த தன் அணியை மீட்டார். இருப்பினும் இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் விளையாடின. இந்நிலையில், தற்போது இரண்டு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்