ஆஸ்திரேலியாவுடன் இன்று மீண்டும் மோதல்: வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி

அடிலெய்டு: இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது. ஏனெனில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும்.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் பெர்த்​தில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இதனால் இந்​திய அணி தொடரில் 0-1 என பின்​தங்கி உள்​ளது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 2-வது போட்​டி​யில் இன்று அடிலெய்​டில் மோதுகின்​றன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்