
போர்டோ: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பிய நாடுகளுக்கான தகுதி சுற்றில் எஃப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு போர்ச்சுகலின் போர்டோ நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் - அர்மேனியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கியது போர்ச்சுகல். அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘ரெட் கார்டு’ பெற்றிருந்ததால் அர்மேனியா அணியுடனான ஆட்டத்தில் களமிறங்கவில்லை.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்