
திருவாரூர்: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணி வீரர் அபினேஷுக்கு வடுவூரில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்றன. இந்திய ஆடவர் அணியில், திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ்(17) இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், சொந்த ஊரான வடுவூருக்கு நேற்று வந்த அபினேஷுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வேனில் அபினேஷை ஏற்றி வந்து, வழிநெடுகிலும் பொதுமக்கள் சால்வை, மாலைகள் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்