ஷஃபாலி பவுலிங்கும் திருப்புமுனையும்: ஹர்மன்பிரீத் கவுரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருக்கிறது இந்திய அணி. இதில் முக்கியப் பங்களிப்பாக பேட்டிங்கில் தொடக்க வீரராக இறங்கி ஷஃபாலி வர்மா அடித்த 87 ரன்களும், பிறகு அவர் சுழற்பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ‘இது ஷஃபாலியின் நாள் என்று எனக்குத் தெரியும்’ என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புகழாரம் சூட்டியுள்ளார். ஷஃபாலி வர்மா 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாசினார். முக்கியமாக, 45 ரன்கள் விளாசிய ஸ்மிருதி மந்தனாவுடன் முதல் விக்கெட்டுக்காக 18 ஓவர்களில் 104 ரன்கள் கூட்டணி மூலம் நல்ல அடித்தளம் வழங்கினார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்