
கொல்கத்தா: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வலுவான சுழற்பந்து வீச்சு இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி வலுவான வேகப்பந்து வீச்சை கொண்ட அணி என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் தற்போது அந்த அணி சுழற்பந்து வீச்சிலும் வலுவானதாக மாறி உள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்