நெபோம்னியாச்சியை வீழ்த்தினார் திப்தாயன்

பஞ்சிம்: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரின் 2-வது சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான திப்தாயன் கோஷ், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை எதிர்த்து விளையாடினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திப்தாயன் கோஷ் 46-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்