“நீங்கள் என்ன பெரிய கில்கிறிஸ்டா, ஹெய்டனா?” - சேவாக் சாடலுக்கு ஷாகிப் அல் ஹசன் பதில்

நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி கையில் நிற்கும் போது தோற்றது வங்கதேசம். இதனையடுத்து வங்கதேச கேப்டனும் சீனியர் வீரருமான ஷாகிப் அல் ஹசன் மீது இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். நேற்று நெதர்லாந்து அணியை வீழ்த்திய பிறகு ஷாகிப் அல் ஹசனிடம் சேவாக் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்குரிய பதிலை அளித்தார் ஷாகிப்.

ஷாகிப் அல் ஹசன் நெதர்லாந்துக்கு எதிராக அரைசதம் கண்டார். இது வெற்றிக்கு வித்திட்டது. ஆனால் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலுமே கேப்டனாக சோபிக்கவில்லை. நேற்று 46 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்