கிரேட்டர் நொய்டாவில் செப்.9ல் நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான்: டெஸ்ட் போட்டியில் மோதல்

புதுடெல்லி: நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒருகிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொண்டதொடர் வரும் 9-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவிளையாட்டு வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணி வீரர்கள் நேற்று நெய்டா வந்து சேர்ந்தனர்.

நியூஸிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி தலைமையில் களமிறங்குகிறது. முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், அஜாஸ் படேல்ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்