க்ருனல் பாண்டியா பந்துவீச்சில் சுருண்டது மும்பை: ஆர்சிபி த்ரில் வெற்றி | ஐபிஎல் 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் பவுண்டரி விளாசி, அடுத்த பந்தில் போல்ட் ஆனார் பிலிப் சால்ட். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களத்துக்கு வந்தார். கோலி உடன் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசிய அவர், பெரிய ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை விக்னேஷ் புதூர் வீழ்த்தினார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்