பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்: தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா ஹைதராபாத்?

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்திருந்த ஹைதராபாத் அணியானது நடப்பு சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கியிருந்தது. அந்த ஆட்டத்தில் 286 ரன்கள் வேட்டையாடிய ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் தாக்குல் ஆட்டம் மேற்கொள்ளும் அந்த அணி ஏதேனும் ஒரு ஆட்டத்தில் 300 ரன்களை எட்டி சாதனை படைக்கக்கூடும் என கூறப்பட்டது. ஆனால் இந்த அதிரடி ஆட்டமே அடுத்தடுத்த ஆட்டங்களில் அந்த அணிக்கு பாதகமாக மாறியது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்