டெல்லிக்கு முட்டுக்கட்டை போடுமா பெங்களூரு? - சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளுமே நடப்பு சீசனில் வெளிமைதானங்களில் அற்புதமான செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்