ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனை மும்பை அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இந்த 3 ஆட்டங்களிலுமே அந்த அணி இலக்கை துரத்தி வீழ்ந்துள்ளது. தோல்வி அடைந்த 3 ஆட்டங்களில் இரண்டை சிஎஸ்கே, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியிருந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்