FIFA WC 2022 | எம்பாப்பே, நெய்மர், மெஸ்ஸி... நாட்டுக்காக கோப்பையை வெல்லப் போகும் பிஎஸ்ஜி நட்சத்திரம் யார்?

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றுக்கு எம்பாப்பே, நெய்மர், மெஸ்ஸி என மூவர் விளையாடும் அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இவர்கள் மூவரும் PSG கிளப் அணிக்காக ஒன்றாக இணைந்து விளையாடி வருகின்றனர். அந்த அணியின் முன்கள வீரர்களான இவர்கள் மூவரில் யார் இப்போது தங்கள் நாட்டுக்காக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ரவுண்ட் ஆப் 16 சுற்றுப் போட்டிகள் இன்றோடு நிறைவு பெற உள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. நெதர்லாந்து, அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், குரோஷியா மற்றும் பிரேசில் என ஆறு அணிகள் இதுவரை காலிறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இன்று ஸ்பெயின் - மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் வாகை சூடும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்