லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியி ல் ஜோஷ் டங்கிற்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சரும், இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ராவும் இடம் பெற்றனர். பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்லி, பென் டக்கெட் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்